Simbu Gettup

Simbu Gettup : பைக்கில் மாஸான கெட்டப்பில் சிம்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த AAA படத்தால் மிக பெரிய சர்ச்சைகளை சந்தித்து இருந்தார்.

AAA படத்தோடு சிம்புவின் திரைப்பயணம் முடிவுக்கு வர இருப்பதாகவும் அவருக்கு நடிகர் சங்கம் ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.

ஆனால் இவற்றையெல்லாம் முறியடிக்கும் விதமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து மீண்டும் தன்னுடைய பழைய இடத்தை பிடித்தார்.

இவர் தற்போது செக்க சிவந்த வானம் படத்தை அடுத்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் சிம்பு மாஸாக பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Simbu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.