
STR Heroine : சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக உலக அழகி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமான செக்க சிவந்த வானம் படம் உலகம் முழுவதும் மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இந்த படத்தை அடுத்து மணிரத்தினம் மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் அந்த படத்தில் சிம்பு, விக்ரம், விஜய் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்து இருந்தன.
சிம்பு, விக்ரம் ஆகியோர் நடிக்க ஒப்பு கொண்டுள்ள நிலையில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதனால் இந்த படத்தில் STR-க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மணிரத்தினம் இயக்க உள்ள இந்த படம் பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி உருவாகும் படமாக இருக்கும் என தகவல்களும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.