Simbu

STR Help : சத்தமில்லாமல் சிம்பு செய்த செயல் குறித்த வீடியோ ஒன்றை பிரபல தொலைக்காட்சி வெளியிட அது ரசிகர்களின் மனதை நெகிழ வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. என்னதான் சர்ச்சைகள் தொடர்ந்து இவரை சுற்றி வந்தாலும் ரசிகர்களின் பலத்தால் இன்றும் அசைக்க முடியாத உச்சத்தில் தான் இருக்கிறார்.

இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மூலம் சிம்பு சத்தமில்லாமல் செய்த செய்த வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தன்னுடைய ரசிகர் ஒருவரின் தங்கை மகளுக்கு பேச வராது. இதனை அந்த ரசிகர் சிம்புவுடன் கூறி உதவி கேட்டுள்ளார்.

இதனையடுத்து சிம்புவும் அந்த குழந்தை மருத்துவ செலவிற்கு உதவி இன்று அந்த குழந்தையை பேச வைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அந்த குழந்தை சிம்பு மாமா சிம்பு மாமா என பாசத்தோடு அழைத்தது சிம்புவை மேடையிலேயே கண் கலங்க வைத்துள்ளது.

இதோ அந்த வீடியோ : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.