நடிகர் சிம்பு தனது அடுத்த படம் குறித்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வரும் மார்ச் 30ம் தேதி பத்து தல திரைப்படம் வெளியாக உள்ளது. ஒபெலி என்.கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்திய பேட்டி தனது அடுத்த படம் குறித்த சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தான் தற்போது பயங்கரமான காட்டு பசியில் இருப்பதாகவும், அதற்கேற்றார் போல் சரியான கதை அமையவில்லை என சிம்பு தனது ஆதங்கத்தை அப்பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் அவர் இதற்கு முன்பு இப்படி இருந்தபோதுதான் மன்மதன் படத்தை இயக்கி நடித்ததாகவும், அதேபோல் தற்போது நான் இயக்க வேண்டும் அல்லது அதற்கேற்றபடியான ஒரு ஸ்கிரிப்டைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இந்த பேட்டியின் வீடியோவையும் தற்போது சிம்பு தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அவரது அடுத்த படத்திற்கான ஆர்வத்தை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.