STR 48 movie new update viral:

கோலிவுட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்து தல’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்க உள்ளனர். ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இப்படம் தொடர்பான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்யும் வகையில் படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தை தொடர்ந்து தற்போது வரலாற்று பாணியில் கதைக்களமாக உருவாக இருக்கும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்பு லண்டனுக்கு சென்று இதற்கான பிரத்தியேக பயிற்சிகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து தாய்லாந்திருக்கும் நடிகர் சிம்பு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தில் சிம்புவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.