ஹீரோவாக நடிக்க இருக்கிறார் வனிதா விஜயகுமார் மகன்.
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இரண்டு திருமணம் செய்து தோல்வியில் முடிந்து இரண்டு மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார் வனிதா விஜயகுமார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தனது கரியரை ரீ ஸ்டார்ட் செய்த வனிதா தற்போது படு பிசியான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி விஜயும் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தான் நடிக்க உள்ளார், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.