நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு பிசாசு 2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியேற்றுள்ளது.

பிசாசு படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் தற்போது இயக்கியிருக்கும் படம் தான் “பிசாசு 2”. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இன்று ஆண்ட்ரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பட குழு மீண்டும் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.