தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார்.

இந்திய திரை உலகில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, சௌந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார். அதன்படி அவர் அளித்திருக்கும் அந்தப் புகாரில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றபோது தனது காரின் சாவி காணாமல் போனதாக குறிப்பிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது வீட்டில் நகைகள் கொள்ளை போனதாக அளித்திருந்த புகார் வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இளைய மகள் அளித்திருக்கும் புகாரின் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.