Soundarya Rajinikanth Interview About Ajith
Soundarya Rajinikanth Interview About Ajith

நடித்தா அஜித் சார் தான் நடிப்பேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Soundarya Rajinikanth Interview About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருடைய நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் அஜித்.

தல அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு உண்டு. இதனை பலர் அவர்கள் அளிக்கும் பேட்டி மூலமாக தெரியப்படுத்தி உள்ளனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் நீங்கள் நடிக்க முடிவு பண்ணிட்டா யாருடன் நடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு அஜித் சார் என்றால் மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.

இவர் அளித்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Watch Video : https://fb.watch/XHqrs1oOv/

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.