இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

Soundaraja Rajinikanth Blessed with Boy Baby : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் வேத் என ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இதனையடுத்து இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகம் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதனை எடுத்து கர்ப்பமாக இருந்த இவர் தற்போது இரண்டாவது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தன்னுடைய குழந்தையின் விரலுடைய புகைப்படத்தை வெளியிட்டு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.