வாரிசு திரைப்படத்தின் அம்மா பாடலை தளபதி விஜயின் அம்மா ஷோபா பாடி அசத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் வரும் 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமன் இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அம்மா பாடலான ‘சோல் ஆப் வாரிசு’ பாடல் அதிக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் இப்பாடலை ஜி தொலைக்காட்சியில் சூப்பர் மாம் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அப்பாடலை அழகாக பாடியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/Cm5u_LKjhM7/?igshid=NTdlMDg3MTY=