வெற்றிமாறன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார் சூரி.

Soori As Hero in Ameer Direction : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. பல்வேறு நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சூரி மீண்டும் ஹீரோவாக அமீர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.