
காமெடி நடிகர் சூரி ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.கே சுரேஷ் பாலா இயக்கத்தில் வெளியாகி இருந்த தாரைதப்பட்டை படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து வில்லனாகவே நடித்து வந்த ஆர்.கே.சுரேஷ் ராஜ் சேதுபதி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா பாண்டி படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
ஒரு நாள் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஆர்.கே.சுரேஷை பார்ப்பதற்காக நடிகர் சூரி சென்றுள்ளார். அப்போது சூரியை படத்தில் நடிக்க சொல்லி கேட்க அவரும் உடனே ஒரு நடித்து கொடுத்துள்ளார்.
கிராமிய பாடல் ஒன்றில் ஆர்.கே சுரேஷுடன் இணைந்து நடனமாடியுள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பு மட்டுமே என்பதால் நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார்.