Soorarai Pottru Trailer Record

சூரரைப் போற்று படத்தின் டிரைலர் படைத்த புதிய சாதனை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Soorarai Potru Trailer Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவை இறுதிச்சுற்று அந்த படத்தை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூர்யாவே தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக ட்ரைலரில் வானம் என்ன உங்க அப்பான் வீட்டு சொத்தா என்ற டயலாக்கை கேட்பது வைரலாகியது.

தற்போது இந்த படத்தின் டிரைலர் யூட்யூபில் 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இதனை கொண்டாடி வருகின்றனர்.

இத்திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி விருந்தாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.