Soorarai Potru Trailer

செம மாஸாக, கெத்தாக சூரரைப்போற்று படத்தின் டைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Soorarai Potru Movie Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் இப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் சூர்யா அறிவித்திருந்தார். மேலும் இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பின்படி சூரரைப்போற்று படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த வீடியோ

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.