![images (44)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2021/07/images-44-5-696x363.jpeg)
நடிகர் சூர்யா எடுக்கும் புதிய அவதாரம் குறித்து தெரிய வந்துள்ளது.
Soorarai Potru Hindi Remake Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று.
ஒரே தங்கப்பதக்கம்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இத்திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் இந்த படத்தை சுதா கொங்கரா தான் இயக்குகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2021/07/images-45-6.jpeg)
இந்தியில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க ரித்திக் ரோஷன், அக்ஷய் குமார், ஷாருக்கான் என பலர் போட்டி போட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்தி ரீமேக்கில் சூர்யாவே நாயகனாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாகவும் இதற்காகத்தான் அவர் உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக நடிகர் சூர்யா பாலிவுட் சினிமாவில் கால் பதிப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் நடிகன் ஆனதுக்கு இவங்க தான் முக்கிய காரணம்! – Actor Appukutty Emotional Speech