Sonia Gandhi to unveil Kalaignar's Statue
Sonia Gandhi to unveil Kalaignar's Statue

Sonia Gandhi to unveil Kalaignar’s Statue – சென்னை: “மறைந்த, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்களின் சிலையை திறந்து வைக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி” அவர்கள்.

5முறை தமிழக முதல்வராகவும், 50 ஆண்டுகாலம் திமுகவின் தலைவராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. முதுமை காரணமாக கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காலமானார்.

அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கலைஞரின் சிலையை செய்யும் பணியை பொன்னேரியில் உள்ள சிற்பி தீனதயாளன் இடம் ஒப்படைக்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே அவரும் சிலையை செய்து முடித்துவிட்டார்.

இந்நிலையில், சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்த சோனியா காந்தி இதற்கு மறுப்பு தெரிவிப்பார் என பலரும் எண்ணினர்.

சோனியா காந்தி கலந்துகொள்ளாவிட்டால் அவருக்கு பதிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்- ஐ அழைத்து சிலையை திறந்து வைக்கலாம் என திமுக வட்டாரத்தில் சிலர் ஆலோசித்தனர்.

இந்நிலையில் “சோனியாகாந்தி விழாவில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். வரும் டிச. 16 அன்று அவர் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க உள்ளார்”.

மேலும், விழாவில் தான் கலந்து கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய இசைவு கடிதத்தில், “வாழ்நாள் முழுவதையும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் அர்பணித்தவர் கருணாநிதி.

அவரது சிலைத்திறப்பு விழாவில் கலந்துக்கொள்வதை பெருமையாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.