Sonia Chahal Wins Women World Boxing Championship
Sonia Chahal Wins Women World Boxing Championship

Sonia Chahal Wins Women World Boxing Championship – 10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடைபெற்ற 57 கிலோ எடை பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்தியா சார்பி‌ல் சோனியா சாஹல் வட கொரியாவை சேர்ந்த ஜோ சன் வா-வை எதிக்கொண்டார்.

மூன்று சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் இரண்டு சுற்றில் இருவரும் சம புள்ளிகள் எடுத்திருந்தனர்.

கடைசி சுற்றில் சோனியா எதிரிக்கு சில குத்துக்கள் கொடுக்கவே முடிவில் சோனியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் இந்தியாவிற்கு நிச்சயம் ஒரு வெள்ளி பதக்கம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தும் சேனியாவின் முயற்சியால் தங்கம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.

மேலும், மற்றொரு பக்கம் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் அரையிறுதியில் எதிரிக்கு வாய்ப்பு கொடுக்காமல் முதல் பாதியில் முன் தங்கி இருந்தார்.

ஆனால், ஆட்டத்தில் ஒரு இடைவெளியில் சிம்ரன்ஜித் கவுர் தனது முகத்தில் குத்து வாங்காவே எதிரனிக்கு ஆட்டம் சாதகமாக மாறியது.

முடிவில் சிம்ரன்ஜித் கவுர், 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார், இருந்தும் குறந்தப்பட்ச பதக்கமான வெண்கலம் கிடைத்தது. உலக குத்துச் சண்டை போட்டியில் சிம்ரன்ஜித் கவுர் பெறும் முதல் பதக்கமாகும்.

இன்று இறுதி போட்டி நடக்க இருக்கிறது. இந்தியா சார்பில் மேரி கோம் உக்ரைனின் ஹன்னா-வை எதிர் கொள்கின்றார்.

சோனியா சாஹல் ஜெர்மனியின் வானெர் கேப்ரியலியுடன் மோதுகிறார்.

இந்த இரு இறுதிப் போட்டிகளுக்கு பிறகு இந்தியாவிற்கு எத்தனை தங்கம் மற்றும் வெள்ளி கிடைக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்புடன் உள்ளனர்.