நடிகை சோபிதா துலிபாலா பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் பியூட்டிஃபுல் போட்டோ ஷூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோபிதா துலிபாலா. சிறந்த மாடலாக பல பட்டங்களை வென்ற இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார்.

தற்போது மீண்டும் பிறமொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் சோபிதா எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் அழகான ஆடையில் மொட்டை மாடியில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பகிர்ந்திருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.