
சீனா : வங்கி ஊழியர் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வங்கி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தி கொண்டிருந்தபோது, திடீரென மீடிங்கின் நடுவில் பாம்பு வந்து விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு, நாலாபுறமும் கதறி ஓடினர். இதனால் அந்த வங்கியே பதட்டமானது.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் வந்து பார்க்கும் போது, அங்கிருந்த சோபாவிற்கு அடியில் மலை பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின் அதை பிடிக்க படாதபாடு பட்டனர். ஒருவழியாக அதை லாவகமாக பிடித்து வனத்துறையினர் எடுத்து சென்றனர்.
பாம்பை பிடித்து விட்டாலும் வங்கி ஊழியர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.