Tamil_Nadu_school

கடந்த ஜூன் மாதம் நடந்த சட்டபேரவை கூட்ட தொடரில் கல்வி மானிய கோரிக்கையின் போது, பள்ளி கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடப்பு ஆண்டில் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்த, பள்ளி கல்வி இயக்குனர் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

அதில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க உள்ள திறன் அட்டையில் “QR கோடு” அல்லது ” பார் கோடு” மூலம் மாணவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும்கல்வி தகவல் மேலாண்மை முகமை தொகுப்பிலிருந்து இணைய தளம் மூலம் தகவல் பெற முடியும்.இதன்மூலம் மாணவர்கள் வருகையை மற்றும் இடை நிற்றலை துல்லியமாக அறியலாம்.

இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் கருத்துருவை அரசு பரிசீலித்து அதை நடைமுறை படுத்த முடிவு செய்து 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவ , மாணவியருக்கு திறன் அட்டை வழங்கவும்,  திட்டத்தை செயல்படுத்த ரூ.12 கோடியே 70 லட்சம் நிதியுதவி வழங்கியும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி ஆணையிட்டுள்ளது.