பராசக்தி படத்திற்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகள்.. சுதா கொங்காரா ஆவேசம்..!
பராசக்தி படத்திற்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்ட வருவதால் சுதா கொங்காரா ஆவேசப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் மீது சிலர் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பி வருகின்றனர் இது குறித்து சுதா கொங்காரா அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்..
இந்த நிலையில் சுதா கொங்காரா அவதூறுகள் மோசமான அவதூறுகள் தெரியாத ஐடிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். இதை பராசக்திக்காக நாங்கள் எதிர்க்க வேண்டும் நேற்று ட்விட்டரில் பார்த்த ஒன்றை நான் தற்போது படிக்கிறேன் CBFC கிட்ட சான்றிதழ் வாங்குறது பெருசு இல்ல.. அண்ணா ரசிகர்கள் கிட்ட மன்னிக்கவும் மன்னிப்பு சான்றிதழ் வாங்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு அவங்க மன்னிச்சு விட்டா பராசக்தி ஓடும் என்று கூறியுள்ளனர்.
இந்தப் பதிவிற்கு பதில் அளித்த சுதா இந்த வகையான தாக்குதல்கள் அரசியல் சார்ந்தவை அல்ல இது பொங்களுக்கு வெளியிடாத நடிகரின் ரசிகர்களிடமிருந்து தான் வருகிறது இந்த ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனத்திற்கு எதிராக நாம் போராடுகிறோம் என்று அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

