ஹெலிகாப்டரில் இருந்து கை டைவிங் செய்து அசத்தியுள்ள பிரியா பவானி சங்கரின் தைரியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தி வாசிப்பாளராக தொடங்கி சின்னத்திரை சீரியல் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையிலும் அறிமுகமானார். அப்பிடத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது அருண் விஜயின் யானை, தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தனது காதலனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி சங்கர் ஸ்கை டைவிங் அடித்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார். மேலும் அந்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள் அந்த வீடியோ பதிவினை ஷேர் செய்து வருகின்றனர்.