SK21 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவரது நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி மாவீரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் அவரது அடுத்த படமான “எஸ்கே 21” திரைப்படம் குறித்து பகிர்ந்திருக்கும் அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவர், எஸ்கே 21 திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகி விடும் என்றும் அப்போதுதான் அப்படத்திற்கான எனது லக்கை வெளிப்படுத்த வேண்டும் என படக்குழு கூறி இருப்பதாக அப்பேட்டியில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/Cu65Oy4gylP/?igshid=NTc4MTIwNjQ2YQ==