மாவீரன் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயனின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுடில் முன்னாடி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ரசிகர்களால் அன்போடு நம்ம வீட்டு பிள்ளை என்று அழைக்கப்பட்டு வரும் இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் நேற்றைய தினம் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் மாவீரன் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடும் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.