Web Ads

தெறிக்க விடும் SK 23 படத்தின் டைட்டில்.. அறிவிப்பு இதோ..!

எஸ்கே 23 படத்தின் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது.

sk 23 movie title teaser update viral

sk 23 movie title teaser update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ருக்மிணி வசந்த் ,பிஜு மேனன், வித்யூத் ஜாம்வல் விக்ராந்த் போன்ற பல பிராபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு “மதராஸி”என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மிரட்டலாக இருக்கும் இந்த டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.