பூஜையுடன் தொடங்கியுள்ளது எஸ்கே 23 படம். 

SK 23 Movie Pooja Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. 

இந்த படத்தை தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். 

சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள எஸ் கே 23 படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 

இந்த நிலையில் தற்போது படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது. முருகதாஸ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.