எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படத்துக்கு, ஜெர்மனியில் இருந்து நவீன கார் இறக்குமதி..

Web Ads

வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது நடிகராகவும் ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.

தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார்.

முன்னதாக ‘இசை’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்போது அவர் இயக்கும் படத்துக்கு ‘கில்லர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவின் கனவு படமான இப்படத்தில், காருக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தனது பிறந்த தினத்தை முன்னிட்டு எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

sj suriyah imports a high end car from germany
sj suriyah imports a high end car from germany