எஸ் ஜே சூர்யா வின் ‘வதந்தி’ வெப்தொடரின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருந்தவர் எஸ் ஜே சூர்யா. இவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் டெரரான வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வரும் எஸ் ஜே சூர்யா அவர்கள் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வதந்தி’ என்னும் வெப் தொடரில் நடித்திருக்கிறார்.

இதில் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து நடிகை லைலா, சஞ்சனா, நாசர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். எஸ் ஜே சூர்யா வின் நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் வெப் தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் இத்தொடரின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் வதந்தி தொடர் அமேசான் ப்ரைம் ஓ டி டி தளத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இத்தொடரின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.