இன்ஸ்டாகிராமுக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் எஸ் ஜே சூர்யா வின் பதிவுகள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. தனக்கென தனி ஸ்டைலில் நடித்து பல ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் இவர் இதுவரை ட்விட்டரில் 1.8 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் நிலையில் தற்போது எஸ். ஜே.சூர்யா இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.

விஜய் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர் அதில் வரும் ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் அவரது பொம்மை திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலரை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.