குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கிவரும் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சிவாங்கி. பாடகியாக அறிமுகமான இவர் தனது குறும்புத்தனமான பேச்சு மற்றும் நடவடிக்கையால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4 வது சீசனில் குக்காக கலந்திருக்கும் சிவாங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.

அதில் அவர், இரண்டு நாட்களாக காய்ச்சலாலும், சளியாலும் எழுந்திருக்க கூட முடியவில்லை, ஆனால் நீங்கள் என் மீது காட்டும் அன்பு என்னை மீண்டும் எழ வைத்துள்ளது. உங்கள் அன்பு இல்லாமல் நான் ஒன்றுமில்லை. தற்போது பரவி வரும் காய்ச்சலில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்களும் கேட் வெல் சூன் என கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.