சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கப் போகும் பிரபலம் முன்னணி நடிகர்..!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து சுதா கோங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்திற்கு வில்லனாக நடிக்கப் போகும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் ஆர்யா தான் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
