Sivakarthikeyan Vs Vijay Producer : Shocking Update | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
எங்கள் வீட்டு பிள்ளை பட டைட்டிலை யாரும் பயன்படுத்தகூடாது. பயன்படுத்த அனுமதியும் இல்லை என விஜயா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Sivakarthikeyan Vs Vijay Producer : வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இதன் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு எங்க வீட்டுப் பிள்ளை என பெயர் வைக்க படக்குழு முயற்சி செய்வதாக செய்திகள் வெளியான நிலையில், எங்கள் வீட்டு பிள்ளை பட டைட்டிலை யாரும் பயன்படுத்தகூடாது.

பயன்படுத்த அனுமதியும் இல்லை என விஜயா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் விஜய் நடிப்பில் பைரவா அஜித் நடிப்பில் வீரம் ஆகிய படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.