
Sivakarthikeyan Video : சிவா மாமா இது உங்களுக்கு தான் என சுட்டி குழந்தைகள் சேர்த்து பாதி பதிவிட்டுள்ள வீடியோ சமூக வளையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன்.
தன்னுடைய அயராத உழைப்பாளாலும் தன்னம்பிக்கையால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற இடத்தை பிடித்துள்ளார் என்றால் மிகையாகாது.
நடிகர் என்பதையும் தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். அருண் ராஜ் காமராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கனா.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்த படத்தில் சிவாவும் அவரது மகளுமான ஆராதனாவும் சேர்ந்து வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியுள்ளனர்.
யூ ட்யூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ள இந்த பாடலை குட்டிஸ் இருவர் சேர்ந்து பாடியுள்ளனர்.
இதனை ட்விட்டரில் பார்த்த சிவகார்த்திகேயன் அந்த குழந்தைகளை வாழ்த்தியுள்ளார்.
Rendu perum super????????Thanks to these lovely kids for Tis cute video ????❤️ https://t.co/jbrPuYCc17
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 21, 2018