சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு இயக்கும் படங்களின் அப்டேட்ஸ்..
‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்..
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனைத்தொடர்ந்து எஸ்கே 24-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
தற்போது சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை கவனித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சில சிக்கல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது SK24 திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு திடீரென நிதி நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால், இப்படத்தின் படப்பிடிப்பை துவங்குவதில் சற்று தாமதம் நிலவி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தொடர்ந்து படங்களை தயாரித்து வருகின்றார். எனவே, அவருக்கு ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை தயாரிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே தெரிகின்றது. எனவே, சிபி இயக்கும் படத்தை தானே ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுக்கலாமா? எனவும் ஆலோசிக்கிறார்.
இந்நிலையில் ‘பராசக்தி’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஒரே சமயத்தில் சிபி சக்கரவர்த்தி படத்திலும், வெங்கட் பிரபு படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாகவும் சிபி இயக்கும் SK26 படம் இருக்கும். இதில், வெங்கட் பிரபு இயக்கும் படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், சிபி சக்கரவர்த்தி இயக்கும் படம் ஒரு மாஸ் என்டர்டைனர் படம் என வெவ்வேறு ஜானர்களில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் வெவ்வேறு ஜானர்களில் சீரியஸான வித்தியாசமான ரோல்களில் நடித்து வந்தாலும், அவரது காமெடி கமர்ஷியல் படங்களை ரசிகர்கள் மிஸ் செய்து வருகிறார்கள். அப்படி மிஸ் செய்யும் ரசிகர்களுக்காக SK24 படம் கலகலப்பாகவும் இருக்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

