ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படத்திற்கான தகவலை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நடிகை மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

 மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மட்டும் டைட்டில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து உள்ள நிலையில். தற்போது இப்படத்திற்கான அப்டேட்டை சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கிறார்.

அது என்னவென்றால் இப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகும் என்ற தகவலை  கூறியுள்ளார். இப்படம் தள்ளி போக காரணம் நடிகர் சத்யராஜ் தான் என்றும் விமர்சித்து இருக்கும் வீடியோவையும் சேர்த்துப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.