நியூ லுக்கில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அயலான் திரைப்படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.

அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான SK21 என்ன தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தயாரித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் SK21 படத்திற்காக நியூ லுக்கில் மாறியிருக்கும் சிவகார்த்திகேயன் நேற்றைய தினம் நடைபெற்ற மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் சோசியல் மீடியா பக்கங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதோ அந்த போட்டோஸ்.