முருகதாஸ் இயக்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான மாவீரன் நடித்த வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்ததாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 

அப்படியான படங்களில் ஒன்றுதான் முருகதாஸ் திரைப்படம். தர்பார் படத்திற்கு பிறகு முருகதாஸ் இயக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூ ஜமால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவர் ஏற்கனவே தளபதி விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி படத்திலும் சூர்யாவுக்கு வில்லனாக அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.