நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதிதி ஷங்கர். இது குறித்த பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல முன்னணி இயக்குனர் ஷங்கர் அவர்களின் இளைய மகளான அதிதி நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரவபூர்வமான தகவலை இப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் ஒரு பதிவின் மூலம் வெளியிட்டுள்ளது.

அதனை நடிகை அதிதி, கார்த்தியின் விருமன் திரைப்படத்தை தொடர்ந்து தான் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கப் போவதாக கூறி அப்பதிவினை உற்சாகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பல திரைபிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.