மாவீரன் திரைப்படத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்து மாஸ் காட்டி வரும் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது. இதற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை இரண்டாம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.