நடிகர் சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இரட்டை லாபம் சம்பாதிப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர் போன்ற பன்முக திறமைகளை கொண்டவர். இவர் தற்போது அதிக அளவில் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறார். அதன் மூலம் இவரின் படங்களும் வெற்றி படங்களாக அமைந்து வருகிறது.

அதாவது முதலில் ஒரு படம் இயக்கி இருந்த நெல்சனை அழைத்து பேசி “டாக்டர்” என்னும் படத்தில் நடித்தார் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் உருவான “டான்” திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை அடைந்திருந்தார். அதேபோல் தற்போது சில அறிமுக இயக்குனர்களிடம் கதைகளும் கேட்டு நடித்து வருகிறாராம். அது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் நடித்தால் அவர்களின் பெயர் தான் முன்னிலையில் தெரியும் மேலும் பெரிய பட்ஜெட் படமாகவும் இருக்கும் ஆனால் ஒரு அறிமுக இயக்குனர் அல்லது வளர்ந்து வரும் புது இயக்குனர் என்றால் அவர் தன் சொல் கேட்டு நடப்பார் மற்றும் பட்ஜெட்டும் குறைவாக இருக்கும்.

அப்படத்தை தனது நிறுவனம் மூலம் தயாரித்து விடலாம் அதனால் தயாரிப்பு செலவும் மிச்சமாகும் எனவே சம்பளத்தை விட அதிக லாபம் கிடைக்கும். அப்படித்தான் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ் கே ப்ரொடக்ஷன் மூலம் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படங்களை தயாரித்து வருகிறார். இதன் மூலம் இரட்டை லாபம் சம்பாதிக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.