அடுத்த படத்திற்கு தயாரான சிவகார்த்திகேயனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியானது.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை ஆர்வத்துடன் திரையரங்குகளில் கண்டு களித்து வரும் ரசிகர்கள் தொடர்ந்து பாசிட்டிவான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது மாவீரன் திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வந்த சிவகார்த்திகேயன் தற்போது இப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிறிதும் ஓய்வில்லாமல் அவர் ஏற்கனவே நடித்து வரும் SK21 திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஷ்மீருக்கு செல்ல ஏர்போர்டிருக்கு சென்றிருக்கிறார். அப்போது லைனில் நிற்கும் சிவகார்த்திகேயன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் டெடிகேஷனை பாராட்டி அப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.