பராசக்தி அருள்தான் காரணம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

Web Ads

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவ​கார்த்​தி​கேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் பொங்கலுக்கு முன்னதாக 10-நிதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.

படத்தில் வில்லனாக ரவிமோகன் மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர் டான் பிக்​சர்ஸ் சார்​பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ளார். ஜி.வி.பிர​காஷ்கு​மார் இசையமைத்​துள்​ளார். 1960-களின் பின்னணி​யில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இன்​பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளி​யிடு​கிறது.

இந்​நிலை​யில், இப்​படத்​தில் 60-களின் கால​கட்​டத்​தைக் கொண்டு வர பயன்​படுத்​தப்​பட்ட கார்​கள், ரயில், ரயில் நிலைய செட் மற்​றும் அந்​தக்​கால பொருட்​களை வைத்​து, ‘பராசக்தி’ பட உலகை செட் மூலம் வள்​ளுவர் கோட்​டத்​தில் உயிர்ப்பித்​துள்​ளனர். பொது​மக்​கள் பார்​வை​யிடும் வகை​யில் இது கண்​காட்​சி​யாக உருவாக்​கப்​பட்​டு உள்​ளது.

வருகிற 21-ந்தேதி வரை இதைப் பார்​வை​யிடலாம். இதன் அறிமுகவிழா​வில் சுதா கொங்​க​ரா, தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் மற்​றும் படக்​குழு​வினர் கலந்து கொண்டனர். இது பற்றி சிவ​கார்த்​தி​கேயன் தெரிவிக்கையில்,

‘இயக்​குநர் சுதா கொங்க​ரா, இந்​தப் படத்துக்​காக 5 வருடம் உழைத்​திருந்​தார். இந்தப்​படம் செய்​வது எல்​லோருக்​குமே கஷ்டம் தான். அதை எல்​லோரும் ஏற்​றுக்​கொண்டு உழைத்துள்ளார்​கள்.

ஸ்ரீலீலாவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன். அவருடன் நடித்​தது நல்ல அனுபவம். அவருடன் கஷ்ட​மான டான்ஸ் மூவ்​மென்ட் தராததற்கு டான்ஸ் மாஸ்​டருக்கு நன்​றி. ரவி மோகன் சார் இந்​தப்​படத்​துக்கு ஒப்​புக் கொண்​டது எனக்கு ஆச்சரி​யம். ஹீரோ​வாக கதை கேட்​டுத் தேர்ந்தெடுப்​பதே கஷ்டம். ஆனால், ஹீரோ​வாக ஹிட் படங்​கள் கொடுத்​துக்​கொண்​டிருக்​கும் போது, வில்​ல​னாக ஒப்​புக்​கொள்​வது மிகப்​பெரிய விஷ​யம்.

இது​போன்ற டீம், இந்த மாதிரி ஒரு கதை, எனக்கு 25 வது படமாகக் கிடைத்​தது என் வரம். பராசக்தி அருள்​தான் காரணம். பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சினையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாவற்​றை​யும் பேசும் படமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

sivakarthikeyan in parasakthi movie update
sivakarthikeyan in parasakthi movie update