இயக்குனரின் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது தங்கச் செயினை திட்டாக அளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan in Karthik Venugopal Marriage : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நடிகராக மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார்.

11 நாட்கள், மகா தீப தரிசனம்.!

இவரது தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா. இந்த படத்தினை கார்த்திக் வேணுகோபால் என்பவர் இயக்கினார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar | HD

திருமணத்திற்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன் இயக்குனருக்கு தங்கச் செயினை அளித்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய தயாரிப்பில் படத்தை இயக்கிய இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் தங்கச் செயினை அளித்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.