Sivakarthikeyan in Don Movie Announcement

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள டான் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan in Don Movie Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். படத்திற்கு டான் என டைட்டில் வைத்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதோ பாருங்க


Attachments area