Sivakarthikeyan Helps to Nadigar Sangam

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி சங்க உறுப்பினர்களை பாராட்ட வைத்துள்ளது.

Sivakarthikeyan Helps to Nadigar Sangam : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ‌‌

இந்த நிலையில் தமிழகத்திலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கடந்த 14 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பல திரையுலக பிரபலங்கள் நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் ஒரு லட்சம் வழங்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் 50,000 வழங்கியுள்ளார். நடிகர் விக்னேஷ் பத்தாயிரமும் நடிகை லதா இருபத்தைந்தாயிரம் வழங்கியுள்ளார்.