டெல்லியில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்..!
டெல்லியில் நடக்கும் பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவளது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.
அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது பொங்கல் திருநாளை டெல்லியில் சென்று கொண்டாடியுள்ளார். அங்கு சென்றுள்ள அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
அப்போது கூறிய அவர் முதல் முறையாக டெல்லியில் பொங்கல் கொண்டாடுவது புதிய அனுபவமாக இருப்பதாகவும் அங்கு நடக்கும் கலை நிகழ்ச்சிகள் பார்க்க புது அனுபவமாக இருந்ததாகவும் முதல் முறையாக பாரத பிரதமர் மோடி அவர்களை சந்தித்தது மறக்க முடியாத தருணம் என்றும் கூறியிருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும் அவரது வாழ்த்தை பகிர்ந்து உள்ளார். இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

