ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’ பட அப்டேட்ஸ்..

Web Ads

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தில் நாயகி ருக்மிணியுடன் நடித்திருப்பது ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

இதுவரை இணையாத சிவகார்த்திகேயன் -ருக்மிணி வசந்த் முதல் முறையாக ‘மதராஸி’ மூலம் இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்த ஜோடி ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்பதையும் தாண்டி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ருக்மிணி தமிழில் அறிமுகமான ACE திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அப்படத்தின் மூலம் ருக்மிணி வசந்த் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அவருக்கு தற்போது ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். இதையடுத்து வெளியாகும் மதராஸி படத்தின் மூலம், மேலும் அவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 5-ந்தேதி ரிலீசாகும் இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என்பதையும் தாண்டி ஏ.ஆர் முருகதாசிற்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என்றே நம்பப்படுகின்றது. தற்போது இப்படத்திலிருந்து வெளியான ‘சலம்பல’
என்ற பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.

sivakarthikeyan act in madharaasi movie update
sivakarthikeyan act in madharaasi movie update