நடிகர் சிவகார்த்திகேயன் கிரீன் இந்தியா சேலஞ்சியை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கில் “மஹாவீருடு” என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டிருக்காக ஹைதராபாத் சென்றிருக்கிறார்.

அப்போது, ஹைதராபாத்தில் உள்ள kBR பார்க்கில் கிரீன் இந்தியா சேலஞ்சே ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த சிவகார்த்திகேயன் அனைவரையும் மரக்கன்றுகளை நடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த சங்கிலியை தொடரும் வகையில் இசையமைப்பாளர் அனிருத்தை அடுத்ததாக பரிந்துரைத்துள்ளார். அதன் பிறகு இந்த அற்புதமான செயலுக்கு MP சந்தோஷ் குமார் BRS காருக்கு தனது நன்றியையும் தெரிவித்து இருக்கிறார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.