சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் மூலம் நடிகை சரிதா ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என்ற தகவலை படக்குழு பதிவின் மூலம் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜோடியாக நடிக்க விருமன் படத்தின் நடிகை அதிதி நடிக்கவுள்ளார். என்பதை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதேபோல் தற்போது இந்தப் படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சரிதா நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தப் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.